• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெளியானது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அட்டவணை!

Sep 2, 2024

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை நாடுகடத்திய ஜேர்மனி!

அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும் என திணைகளம் தெரிவித்துள்ளது.

அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை முதலாவது வினாத்தாள் நடைபெறும். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இம்முறை 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.

யாழிலிருந்து கொழும்பு வந்த சொகுசு பேரூந்து விபத்து.

பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள் www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்திற்குச் சென்று ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று (02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் கூறியுள்ளது.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed