• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

12 வயது மகளின் முகத்தை தீக்குச்சியால் எரித்த தந்தை

Aug. 29, 2024

பதுளை பண்டாரவளை பிரதேசத்தில் 12 வயது மகளை தீக்குச்சியால் முகத்தை எரித்து கொடூரமான முறையில் சித்திரவதை செய்த தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பண்டாரவளை – லியங்கஹவெல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 7ஆம் வகுப்பு பாடசாலை மாணவியின் முகம் தீக்குச்சியால் எரிக்கப்பட்ட நிலையில் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவி மாலை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமி சமையலறை நீர் குழாய்க்கு அருகில் கைகளை கழுவிக் கொண்டிருந்த போது தந்தை மாணவியை திட்டி மிரட்டி, தீக்குச்சியால் மாணவியின் முகத்ததை காயப்படுத்தியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தீக்காயங்களுடன் குறித்த மாணவி பாடசாலை சென்ற நிலையில், முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதை அவதானித்த அதிபர் இது தொடர்பில் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து மாணவியின் தந்தை கைது செய்து பண்டாரவளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed