• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வங்காளதேசத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பலி !

Aug 25, 2024

வங்காள தேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை மற்றும் இந்திய எல்லைகளை தாண்டி மலைகளில் இருந்து நீர் பெருக்கத்தால் அங்கு வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் உயிரிழந்த இளம் தாயான சிந்துஜாவின் கணவன் தற்கொலை

பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சகத்தின் கீழ் உள்ள நாட்டின் தேசிய பேரிடர் பதிலளிப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் சமீபத்திய தினசரி பேரிடர் நிலைமை அறிக்கையின்படி, நாட்டின் மொத்தமுள்ள 64 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 50 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் ஏழு இலட்சத்திற்கு விலை போன மாம்பழம் !

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான பருவ மழை மற்றும் இந்திய எல்லைகளைத் தாண்டி மலைகளில் இருந்து நீர் பெருக்கத்தால் தூண்டப்பட்ட வெள்ளத்தால் சாலைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பல தென்கிழக்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களை வழங்க அதிகாரிகள் இன்னும் போராடி வருகின்றனர். மேலும், இந்த வெள்ளம் வடக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளின் பரந்த நிலப்பரப்பில் உள்ள வீடுகள் மற்றும் பயிர்களுக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

​​

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed