• Di. Dez 3rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிரித்தானியாவில் இடம்பெற்ற தீ விபத்து : பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்

Aug 23, 2024

பிரித்தானியாவின் (United Kingdom) பிராட்போர்ட் (Bradford) நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒரு பெண்ணும் அவரது மூன்று பிள்ளைகளும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,265-ஆக உயர்வு

குறித்த விபத்தில் 29 வயதான பெண் மற்றும் அவரது 09 வயது மகள், 05 வயது மகன் மற்றும் இளைய மகள் ஆகியோர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டதாக காவல்துறையின் துப்பறியும் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வீழ்ச்சி கண்டுள்ள தங்கத்தின் விலை: இன்றைய தங்க நிலவரம்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் 39 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டடுள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளதுடன், அவர்களின் நண்பர்கள் மலர்களை வைத்து கவலைகளை வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed