• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நெருங்கியது மூன்றாம் உலகப் போர்: எச்சரித்துள்ள ரஷ்ய தரப்பு.

Aug 16, 2024

ரஷ்யாவில் (Russia) உக்ரைனின் (UKraine) ஊடுருவலானது, மூன்றாம் உலகப் போர் நெருங்கியுள்ளதை சுட்டிக்காட்டுவதாக ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) கூட்டாளியுமான மிகைல் ஷெரெமெட் (Mikhail Sheremet) தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஷ்யாவிற்குள் உக்ரைன் இராணுவம் ஊடுருவியது.

உக்ரைனிய படைகளின் இந்த ஊடுருவல் காரணமாக கிட்டத்தட்ட 120000 இற்கும் மேற்பட்ட மக்கள் குர்ஸ்க் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதுடன் குறித்த பகுதியில் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், குர்ஸ்க் (Kursk) பிராந்தியத்தில் உள்ள சுட்ஜா (Sudzha) நகரை உக்ரைன் படைகள் ஆக்கிரமித்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், உக்ரைனின் இந்த நடவடிக்கைகள் மூன்றாம் உலகப் போருக்கு காரணமாக அமையும் என புடினின் கூட்டாளி மிகைல் ஷெரெமெட் எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் இந்த நடவடிக்கைகளின் போது, தற்காத்துக் கொள்வதற்காக ரஷ்ய மண்ணில் பிரித்தானிய,அமெரிக்கா ஆயுதங்களை பயன்படுத்துவது, ரஷ்ய பொதுமக்கள் மீதும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது, தாக்குதலில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பு என்பன அதற்கு மறுக்க முடியாத ஆதாரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவை நிச்சயமாக மூன்றாம் உலகப் போருக்கான ஒத்திகை என்றே மிகைல் ஷெரெமெட் கொந்தளித்துள்ளதுடன் ரஷ்யா மீதான தாக்குதலுக்கு NATO உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்திருக்கு எனவும் அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed