ரஸ்யாவின் கேர்ஸ்க்கில் தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் உக்ரைன் தனது இராணுவஅலுவலகத்தை திறந்துள்ளது.
ரஸ்யாவின் மேற்கில் உள்ள கேர்ஸ்க் பிராந்தியத்திற்குள் ஊருடுவியுள்ள உக்ரைன் அங்கு தான் கைப்பற்றியுள்ள பகுதிகளில் இராணுவ அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த அலுவலகம் சட்டமொழுங்கை பேணுவதற்காகவும் மக்களின் உடனடி மனிதாபிமான தேவைகளை பூர்த்திசெய்வதற்காகவும் இந்த அலுவலகத்தை திறந்துள்ளதாக உக்ரைனின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியாழக்கிழமை தனது படைகள் மேலும் முன்னேறியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கேர்க்ஸ் பிராந்தியத்திற்குள் உக்ரைன் படையினர் உள்ளே முன்னேறியுள்ளனர்,12 குடியிருப்புகள் உட்பட 1500 சதுரகிலோமீற்றரை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கின்றனர் என ஜெனரல் சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
எனினும் ரஸ்யாவின் பகுதிகளை கைப்பற்றும் நோக்கம் இல்லை என தெரிவிக்கும் உக்ரைன் ரஸ்யாவை சமாதானத்திற்கு இணங்கச்செய்வதற்காகவே இந்த நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளது.
உக்ரைனி;ன் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
- ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்
- இன்றைய இராசிபலன்கள் (22.11.2024)
- யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை!2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு
- வவுனியா பகுதியில் வெடிக்காத நிலையில் மோட்டார் செல் மீட்பு!