• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் பல கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் இருவர் கைது!

Aug. 13, 2024

 யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்


நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னம் தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்தவர்கள் கஞ்சா போதை பொருளை மீட்டனர்.

4வது ஆடி செவ்வாய் இன்று

சம்பவம் தொடர்பில் அரியாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவர்களிடம் இருந்து 156 கிலோ கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் , அவற்றின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed