• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக கூறி பண மோசடி

Aug 13, 2024

காலியில் 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டியை கொள்வனவு செய்வதாக தெரிவித்த நபரின் கணக்கில் இருந்து 172,280 ரூபாவை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தம்மிடம் தலா 45000 ரூபாவுக்கு நாய்க்குட்டிகள் விற்பனைக்கு இருப்பதாக ஒருவர் இணையத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

யாழில் அம்புலன்ஸ் சாரதி தற்கொலை.

இதனையடுத்து காலியில் உள்ள ஒருவர் நாய்க்குட்டியை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து நாய்க்குட்டிகளின் உரிமையாளர் போல் நடித்த நபரை அழைத்துள்ளார்.

இதன்போது 20000 ரூபாய் முன்பணம் தேவை எனவும் வங்கி கணக்கு எண் வழங்கியுள்ளார். அதற்கமைய, நாய் வாங்குபவர் இருபதாயிரம் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார்.பணத்தை வைப்பு செய்த பிறகு, நாயின் உரிமையாளர் மீண்டும் அழைத்து, OTP உடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வரும் என கூறினார்.அந்த எண்ணைக் கொடுத்த மூன்று நிமிடங்களில், நாய் உரிமையாளர், கொள்வனவாளரின் கணக்கில் இருந்து மூன்று முறை 172,280 ரூபா பணத்தை எடுத்துள்ளார்.

பணம் எடுக்கப்பட்டதை அறிந்த அவர், இந்த மோசடி குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.மேலும் இவ்வாறான ஒன்லைன் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.OTP இலக்கங்களை யாருக்கும் வழங்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed