• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த மட்டு. மாமாங்கேஸ்வரர்!

Aug 3, 2024

வரலாற்று சிறப்பு மிக்க கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு  அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த தேர் உற்சவம் இன்று(3) காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன பெண் ஒருவர் உயிரிழப்பு.

மூர்த்தி,தலம்,தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

யாழ்.திருநெல்வேலியில் சூடுபிடித்த விற்பனை!

 இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இரத உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்று பஞ்சமுக விநாயகருக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற்றது.

தொடர்ந்து வெளிவீதி பஞ்சமுக விநாயர் தேரில் ஆரோகணிக்க அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று பெண்கள்,ஆண்கள் வடமிழுக்க மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

பூமியில் ஏற்படப் போகும் மாற்றம் ; இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம் 

அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தின்போது இரண்டு பருந்துகள் தேரினை வலம்வந்த காட்சி அற்புத காட்சியாக அமைந்தது.

இராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும், வடக்கே நகுலேச்சம் போன்று கிழக்கிலங்கையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும்கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்துவருகின்றது.

அனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக்கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்றுசிறப்பு காணப்படுகின்றது.

மேலும்  அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்தோற்சவம் நாளை (4) ஆலய தீர்த்தக்குளத்தில் நடைபெறவுள்ளது.  

பக்தர்களின் அரோகரா கோசம் முழங்க தேரில் பவனி வந்தார் மட்டு. மாமாங்கேஸ்வரர்! | Arogara Kosam Of The Devotees Mamangeswarar Ther

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed