கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இன்று காலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு ஏழு பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது அது மட்டும் இன்றி 500 குடும்பங்களை சேர்ந்த 1000 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை என்றும் மீட்டுக் குழு தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது
சுவிசில் இருந்து விமான சேவைகள் இடைநிறுத்தம்.
கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் பல பகுதிகளில் அணைகள் நிரம்பி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டிலிருந்து வந்தவர் கட்டுநாயக்காவில் கைது.
இந்த நிலையில் வயநாடு பகுதியில் இடைவிடாது நேற்று இரவு கனமழை கொட்டிய நிலையில் இன்று காலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகவும் அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் சிலர் சிக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது
இந்த பகுதியில் சுமார் 500 வீடுகளில் ஆயிரம் பேர் வசித்து வரும் நிலையில் பேரிடர் மீட்பு குழுவினர் அவர்களை மீட்கும் பணிகள் இருப்பதாகவும் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. மீட்புப் பணிகள் ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.