• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யூட்யூப், மோகம்! 10 கிலோ உணவை சாப்பிட்டவர் பரிதாப பலி!

Jul 22, 2024

சீனாவில் பிரபல யூட்யூபராக இருந்த பெண் 10 கிலோ உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது!!

தற்போதைய தலைமுறை இடையே யூட்யூப், இன்ஸ்டாகிராம் மோகம் அதிகரித்துவிட்ட து. அந்தவகையில் Travel Vlog, Food Vlog வீடியோக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பலரும் இவற்றினை பதிவேற்றி வருகின்றனர்.

நல்லூர் கந்தன் பெருந் திருவிழாவை முன்னிட்டு பந்தல்கால் நாட்டும் நிகழ்வு

அவ்வாறாக சீனாவில் உணவு வீடியோக்கள் செய்து பிரபலமானவர்தான் பான் ஜியோடிங் என்ற பெண். இவர் உணவுகளை அதீதமாக சாப்பிடுவது, உணவு ரிவ்யூ என பல வீடியோக்களை செய்து பிரபலமானார்.

அதேசமயம் அதீதமான உணவுகளின் காரணமாக இவர் உடல் எடை வேகமாக அதிகரித்தது. 120 கிலோ எடையில் இருந்த பான் ஜியோடிங் சமீபத்தில் உணவு செரிமான கோளாறு தொடர்பான சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்படி இருந்தும் மருத்துவமனையிலிருந்து வெளியான சில நாட்களிலேயே உணவு சேலஞ்ச் ஒன்றை லைவ் வீடியோவாக தனது சேனலில் செய்துள்ளார். அதில் சுமார் 10 கிலோ எடையுள்ள உணவுகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு லைவ் செய்துள்ளார்.

நடிகர் திலகம் சிவாஜியுடன் சிறு வயதில் நடிகை மீனா எடுத்துக்கொண்ட புகைப்படம்

அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவர் அதிகமான உணவுகளை சாப்பிட்டதும் அவை செரிமானமாகாமல் இருந்ததுமே அவர் உயிரிழக்க காரணம் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் மீண்டும் அதிகரித்துள்ள பணவீக்கம்!
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed