• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகரிக்கும் கடல் வெப்பநிலை தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை!

Jul 22, 2024

தென்மேற்கு பருவக்காற்று வானிலை காரணமாக அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை

சிவப்பு எச்சரிக்கை
இதனால் அந்த கடல் பகுதிகள் செயற்படும் நெடுநாள் மீன்பிடி படகின் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் உடனடியாக கரையின் பாதுகாப்பான பகுதிகளுக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்த கடல் பகுதிகளில் 70-80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுவதுடன் கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

மழைவீழ்ச்சி
மேலும், வளிமண்டலவியல் திணைக்களத்தால் வௌியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல், மேல் மற்றும் திருகோணமலை, மொனராகலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed