• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நிலவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை: மனிதர்கள் வாழலாம் என தகவல் 

Jul 16, 2024

நிலவில் முதன்முறையாக குகை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், இந்த குகையானது, குறைந்தது 100 மீ ஆழத்தில் இருக்குமெனவும் மனிதர்கள் வாழ பொருத்தமானதாக இருக்குமெனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை

இத்தாலியிலுள்ள(Italy) Trento பல்கலை அறிவியலாளர்களான Lorenzo Bruzzone மற்றும் Leonardo Carrer என்னும் அறிவியலாளர்கள் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தக் குகையைக் கண்டுபிடித்துள்ளார்கள்.

நிலத்தடியில், கண்டுபிடிக்கப்படாத மறைந்திருக்கும் நூற்றுக்கணக்கான குகைகளில் இதுவும் ஒன்று என ஆராய்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

42 பெண்கள் கொடூரக் கொலை.தோண்ட தோண்ட பிணங்கள்! கென்யாவில் அதிர்ச்சி

மேலும், நிலவில் இதேபோல நிலப்பரப்புக்கு அடியில் நூற்றுக்கணக்கான குகைகள் இருக்கலாம் என்றும், அவற்றில் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகையும் ஒன்று என்றும் அறிவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மீண்டும் ஜோடி சேரும் சரத்குமார் தேவயாணி!

பல மில்லியன் அல்லது பில்லியன் ஆண்டுகளுக்கு முன், நிலவில் எரிமலைக்குழம்பு வெளியேறியதால் இந்த குகை உருவாகியிருக்கக்கூடும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed