• Sa.. Apr. 5th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கார் விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயம்

Juli 14, 2024

அனுராதபுரம் (Anuradhapura) – திருகோணமலை (Trincomalee) வீதியில் அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு காரொன்று ஹொரோவ்பதான யாங்கோயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல். எவ்வளவு தெரியுமா?

(13) இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரும் ஹொரோவ்பதான பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரின் சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடு!மயிரிழையில் தப்பிய டொனால்ட் டிரம்ப்

இதேவேளை குறித்த விபத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலைக்கு தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed