பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் (Chavakachcheri Base Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) – பூநகரி (Poonakary) 15 ஆம் கட்டை சந்திப்பகுதியில் இன்று (12) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து மல்லாவிக்கு (Mallavi) சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு (CTB) சொந்தமான பேருந்தில் சாவகச்சேரி பகுதியில் இருந்து குறித்த ஆசிரியர் ஏறியுள்ளார்.
பேருந்து பூநகரி பகுதியில் பயணித்துகொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறிய ஆசிரியர் பேருந்தின் பின்கதவுப் பகுதியால் கீழே விழுந்துள்ளார்.
இந்த நிலையில் தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த ஆசிரியர் சாவகச்சேரி ஆதாார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவேளை திருமுறுகண்டியில் நேற்று (11) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)