• So.. Apr. 6th, 2025 8:32:34 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

முறுகண்டி ஏ9 வீதி விபத்தில் ஒருவர் பலி!! பலர் படுகாயம்!

Juli 11, 2024

முல்லைத்தீவு (Mullaitivu) ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (11.07.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து  யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹையர்ஸ் ரக வாகனம் ஒன்று முன்னே சென்று கொண்டிருந்த பாரஊர்தி ஒன்றுடன் மோதி குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நால்வரும் உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed