• Fr. Sep 20th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

Jul 6, 2024

இலங்கையில் (srilanka) கோழி இறைச்சியின் விலை வேகமாகக் குறையும் சாத்தியம் காணப்படுவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் கோழி இறைச்சி உற்பத்தியில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய இராசிபலன்கள் (06.07.2024)

அந்தவகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கோழி இறைச்சியின் அதிகூடிய உற்பத்தி பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு (Ministry of Agriculture) தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில், ஆண்டு முழுவதும் சராசரியாக சுமார் 220 முதல் 230 மில்லியன் கிலோ கோழி இறைச்சியே உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த வருட இறுதிக்குள் கோழி இறைச்சி உற்பத்தி மேலும் சாதனை படைக்கும் என விவசாய அமைச்சு (Ministry of Agriculture) நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed