தனது மகன் திருமணத்திற்கு முன்பாக 50 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நடத்தி வைத்தார்.
கரவெட்டியைச் சேர்ந்த இளம் தாய் பிரித்தானியாவில் திடீர் மரணம்!
ரிலையன்ஸ் குழுமத்தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும் – ராதிகா மெர்ச்ன்ட்டுக்கும் வரும் 12 ஆம் தேதி மும்பையில் திருமணம் நடைபெற இருக்கிறது. மிக பிரமாண்டமாக நடக்க உள்ள இந்த திருமணத்துக்காக ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இதில் தொழிலதிபர்கள், சினிமா, அரசியல், பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.
மைதானத்தில் கண் கலங்கிய ரொனால்டோ.
இந்நிலையில் மகன் திருமணத்திற்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரின் மனைவி நீடா அம்பானியும், நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர். அப்போது மணமக்கள் நீடா அம்பானி காலில் விழுந்து ஆசி பெற்றனர்.
இந்தியாவில் ஆன்மிக நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலி!
திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகளுக்கு சீர்வரிசையாக தங்க மோதிரம், வெள்ளி மெட்டி, மூக்குத்தி மற்றும் வீட்டு உபயோக பொருள்களுடன் ரூ.1 லட்சம் மதிப்பிலான காசோலையும் பரிசாக தரப்பட்டது. தொடர்ந்து இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தப் போவதாக முகேஷ் மற்றும் நீடா அம்பானி உறுதி அளித்துள்ளார்கள்.
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்
- ஏழரை சனி பெயரச்சியால் கஷ்டங்களை சந்திக்க போகும் ராசிகள்
- இன்றைய இராசிபலன்கள் (22.11.2024)
- யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை!2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு