முல்லைத்தீவு (Mullaitivu) – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று இரவு (26.6.2024) 11 மணியளவில் மாங்குளம் (Mangulam) பனிக்கன் குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பனிக்கன் குளம் பகுதியில் நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் அதி சொகுசு பேருந்தின் பின்புறம் லொரி ஒன்று மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் திருத்த பணியில் ஈடுபட்டிருந்த மூவர் சிக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
பாரவூர்தி சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த ஒருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் தொடர்பாக மாங்குளம் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
- 4ஆம் ஆண்டு நினைவு. அமரர். கதிரவேலு சத்தியபாலன். (சிறுப்பிட்டி மேற்கு. 15.04.2025)
- முல்லைத்தீவு குமுளமுனையில் தடம்புரண்ட துாக்கு காவாடி! இருவர் படுகாயம்
- வவுனியாவில் நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞன் பலி
- இன்றைய இராசிபலன்கள் (15.04.2025)
- சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தில் நடைபெற்ற புதுவருட பூஜை