நீர்கொழும்பில் (Negombo) இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
கடவல பிரதேசத்தில் வைத்து முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வண்டியொன்று விபத்து
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தந்தை, மகள் மற்றும் அத்தை ஆகிய மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ். பத்தமேனி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம்
காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
மேற்படி, விபத்திற்கு அதிகமான வேகமே காரணமெனவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார தூணில் மோதுண்டு இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- முதலாம் ஆண்டு நினைவு!இராஜதுரை பொன்னம்பலம் (சுவிஸ்,18.04.2025)
- சித்திரை முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு!
- யாழில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு தாக்குதல்!
- வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணத்திற்கு வரி
- நாளை வராக ஜெயந்தி (18-04-2025)