குடல் அலர்ஜி ஏற்பட்டு 15 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (22) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இந்த சிறுவன் நேற்று முன்தினம் (21) வாந்தி போன்ற உடல் உபாதைக்குள்ளான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கோப்பாய்-இராசபாதை வீதியில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்.
அதன் பின்னர் நேற்று அதிகாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதே இடைநடுவில் உயிரிழந்துள்ளான்.
சிறுவனுக்கு குடல் அலர்ஜி ஏற்பட்டதாலேயே இந்த மரணம் நேர்ந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மரண விசாரணைகளில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் ஈடுபட்டதை தொடர்ந்து, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சிறுவனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு : வெளியான புதிய தகவல்
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)