• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தேசிய அடையாள அட்டையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்!

Juni 14, 2024

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சாதனை படைத்த யாழ்ப்பாண தமிழன்

முதன்முறையாக அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முதலில் இந்த அடையாள அட்டை வழங்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கடைசிப் படத்தை தானே தயாரிக்கிறாரா விஜய்?

அதற்கமைய, தற்போதைய நிலையில் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு உறுதிப்படுத்தல் கடிதம் மட்டுமே வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு வருடத்திற்குள் பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளர்.

எனினும் தற்போது வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு வழமை போன்று இதற்கு முன்னர் வழங்கப்பட்ட அடையாள அட்டை வழங்கப்படும்.

ஒரு நாள் சேவை அல்லது பொதுச் சேவைகளின் கீழ் ஆட்கள் பதிவுத் திணைக்களத்தில் இதனை பெறலாம் என மேலும் தெரிவித்துள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed