• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியுள்ள ஆப்பிள் நிறுவனம்!

Juni 13, 2024

உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனமாக ஆப்பிள்(Apple)  நிறுவனம் மாறியுள்ளது.

இதுவரை முதல் இடத்திற்கு முன்னேறி வந்த மைக்ரோசொப்ட்(Microsoft) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஆப்பிள் நிறுவனம் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் ஐபோன்களின் விற்பனை அபரிமிதமாக அதிகரித்துள்ளதால் அந்நிறுவனத்தின் பங்கு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதாலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 4 சதவீதம் அதிகரித்து 215.04 டொலராக உயர்ந்ததுள்ளதன் மூலம் நிறுவனத்திற்கு 3.29 டிரில்லியன் டொலர் சந்தை மதிப்பு கிடைத்துள்ளது.

apple ai

இதேவேளை, மைக்ரோசாப்ட் பங்கு மதிப்பு சரிந்ததால், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.24 டிரில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed