• So. Nov 24th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்

Jun 7, 2024

 யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்றையதினம் (07.06.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தால் கோடி நன்மைகள்.

கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை சாந்தி கிரியைகள் நடைபெற்றன.

இன்றைய தினம் அதிகாலை பூஜை வழிபாடுகளை தொடர்ந்து மதியம் கொடியேற்றம் நடைபெற்றது.

யாழில் உணவகமொன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இதனைத் தொடர்ந்து 15 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் மறுநாள் வெள்ளிக்கிழமை தீர்த்தத் திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்களும் நிறைவு பெறவுள்ளன.

கனடாவில் வீட்டு வாடகை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன் கருதி இம்முறையும் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இடையில் விசேட பேருந்து சேவைகளும் குறிகாட்டுவான் – நயினாதீவு இடையில் விசேட படகு சேவைகளும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழில் நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் | Annual Makotsavam Naga Pusani Amman Temple Jaffna
யாழில் நாக பூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பம் | Annual Makotsavam Naga Pusani Amman Temple Jaffna
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed