• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி!

Mai 8, 2024

கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பன்றி இறைச்சி உட்கொண்ட கைதிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கனடாவில் புதிய விசா முறை நடைமுறை!

வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட உணவுப் பொதியை கைதியொருவரும் மேலும் 15 கைதிகளும் உட்கொண்டுள்ளனர்.

பிறந்தநாள் வாழ்த்து. ஐெயதாஸ். (08.05.2024;ஜெர்மனி)
இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!
இருவரின் உயிரைப்பறித்த பன்றி இறைச்சி! | The Pork Of The Two Prison
  1. யாழ். புத்தூரில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
  2. பூமியில் புதையும் சீன நகரங்கள்: வெளியான எச்சரிக்கை

அதனை உட்கொண்டவர்களில் மூன்று கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில், பொரளை மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

பொரளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியின் வீட்டிலிருந்து குறித்த உணவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பன்றி இறைச்சியினால் ஏற்பட்ட ஒவ்வாமையினால் கைதிகள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை அந்த உணவை உட்கொண்ட மேலும் 13 பேருக்கு எவ்வித நோய் நிலைமைகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கைதிகள் உயிரிழந்தமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed