இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை ருவாண்டாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் அமல்படுத்தியுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலையில் மூளைக்காய்சல் நோயால் ஒருவர் மரணம்!
உலகம் முழுவதும் மக்கள் பலர் பிழைப்புக்காக அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைவது தொடர்கதையாக இருந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளில் இவ்வாறு சட்டவிரோதமாக நுழைபவர்களை பிடித்து சிறையில் அடைப்பதும், பின்னர் சொந்த நாடுகளுக்கு அனுப்புவதும் உண்டு.
துயர் பகிர்தல். செல்வராசா சர்வேஸ்வரன் (23.04.2024, சிறுப்பிட்டி மேற்கு)
அதுபோல இங்கிலாந்திலும் நாளுக்கு நாள் இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அவர்களை கைது செய்யவோ, சொந்த நாடுகளுக்கு அனுப்பவோ செய்யாமல் இங்கிலாந்து அரசு புதிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடுக்கட்டப்பட உள்ளனர். இதற்காக 240 மில்லியன் பவுண்டுகளை ருவாண்டாவுக்கு இங்கிலாந்து வழங்கியுள்ளது.
கனடாவில் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
தற்போது இந்த நாடுகடத்தும் சட்டமசோதாவை நாடாளுமன்றத்தில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அமர்வு அமல்படுத்தியுள்ளது. இது ஜனநாயக முறைக்கே எதிராக இருப்பதாக ஐநா உள்ளிட்ட அமைப்புகள் வருத்தம் தெரிவித்து வருகின்றன.