கனடாவில் முதன் முதலில் வீடு வாங்குவோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தை கனேடிய அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
கனடாவில் புதிதாக வீடு கொள்வனவு செய்வோருக்கு கடந்த 2019ம் ஆண்டில் இருந்து இந்த நிவாரண திட்டங்கள் வழங்கப்பட்டு வந்தன.
கடன் வட்டி வீதம்
அதன்போது, முதல் தடவை வீடு கொள்வனவு செய்வோரின் அடகுக் கடன் வட்டி வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதேவேளை, வீடு கொள்வனவு செய்யப்பட்ட தொகையில் 10 வீதமான தொகையை அரசாங்கம் கடனாக வழங்கியுள்ளது.
நிவாரணங்கள்
இந்த தொகையை 25 ஆண்டுகளில் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்
- பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்.
- கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்