• Sa. Nov 23rd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா?

Mrz 2, 2024

பொதுவாகவே, நாம் தூங்கும் போது நமக்கு கனவு வருவது வழக்கம். சில கனவுகள் சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது.

மேலும் நமக்கு வரும் கனவுகளை சரியாக புரிந்து கொண்டால் வரவிருகும் ஆபத்துகளை முன்கூட்டியே தவிர்க்கலாம். அந்தவகையில், சிவராத்திரிக்கு முன்பு சிவபெருமான் சில விஷயங்களை கனவில் நமக்கு முன்னறிவிப்பதாக ஐதீகம்.

முல்லைத்தீவு கோர விபத்தில் ஒருவர் பலி!! இருவர் படுகாயம்!

சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா? என்ன நடக்கும் என பாருங்கள் | Shivratri Pambu Kanavil Vantha Enna Nakkumastrolgy

இந்த ஆண்டு, மகாசிவராத்திரி மார்ச் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. இந்நாளில் சிவனுக்கு ருத்ராபிஷேகம் செய்தால் சிவன் மகிழ்ச்சி அடைவார்.

அதுமட்டுமின்றி இந்த திகதியில், விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை சிவபெருமானின் அருளை பெற உதவும். அந்தவகையில், மகாசிவராத்திரிக்கு முன்பு சில கனவுகள் வரும்.

யாழில் 34 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தில் வழிபாடு

சிவராத்திரிக்கு முன் இப்படியெல்லாம் கனவு வருகிறதா? என்ன நடக்கும் என பாருங்கள் | Shivratri Pambu Kanavil Vantha Enna Nakkumastrolgy

சிவலிங்கத்திற்கு அபிஷேகம்

மகாசிவராத்திரிக்கு முன்பு, கனவில் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் வந்தால், அந்த நபரால் சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, அவரது வாழ்க்கையில் இருக்கும் எல்லா விதமான கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார். அதுமட்டுமின்றி, அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி விரைவில் வரப்போகிறது என்று அர்த்தம்.

வில்வ மரம்

ஒரு நபர் மகா சிவராத்திரிக்கு முன்பு கனவில் வில்வ மரத்தையும், இலைகளையும் கண்டால் அவரது பொருளாதார பிரச்சனைகள் விரைவில் தீரும் என்று அர்த்தம்.

ருத்ராட்சம்

மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் ருத்ராட்சம் வந்தால் அது மங்களகரமானது என்று ஜோதிடம் கூறுகிறது. மேலும் இந்த கனவு வந்தால் அந்த நபரின் துன்பங்கள், நோய்கள், தோஷங்கள் நீங்கும் மற்றும் அவரது நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடியும். 

பாம்பு

மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் பாம்பு வந்தால், நல்லது. ஏனெனில், அது செல்வத்தின் சின்னமாகும்.  

நந்தி

சிவராத்திரிக்கு முன் அல்லது சிவராத்திரி அன்று கனவில் நந்தி வந்தால், சிவபெருமானின் அருள் நிச்சயமாக கிடைக்கும் என்று அர்த்தம். மேலும், இந்த கனவு அந்த நபரின் வெற்றியைக் குறிக்கிறது.

திரிசூலம்

மகாசிவராத்திரி அன்று கனவில் திரிசூலம் வந்தால், உங்களது எல்லா கஷ்டங்களையும் சிவன் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.

கருப்பு சிவலிங்கம்

மகாசிவராத்திரிக்கு முன்பு கனவில் கருப்பு சிவலிங்கம் வந்தால், அந்த நபருக்கு விரைவில் பணியில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed