• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் !

Feb. 26, 2024

யாழில் காரொன்று திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

யாழ்ப்பாணம் பழைய தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வங்கிக்கு சென்ற நபரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இந்நிலையில்,  உடனடியாக யாழ் மாநகர சபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த தீயணைப்பு படையினர் உடனடியாக செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் குறித்த கார் முழுமையாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த கார் தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed