யாழ்ப்பாணம் – அச்செழு பகுதியில் வீடொன்றில் நுழைந்த வன்முறை கும்பல் வீட்டை சேதப்படுத்தியதுடன் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதலையும் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (22.02.2024) இரவு 10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் மக்களிடம் பொலிசார் விடுத்துள்ள கோரிக்கை!
சம்பவத்தில் 44 மற்றும் 45 வயதான சகோதரர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த இருவரும் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பபட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரிடையே ஏற்பட்ட முரண்பாடே வன்முறைக்கான காரணம் என சந்தேகிக்கும் அச்சுவேலி பொலிஸார், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- இன்று இடம்பெற்ற புளியம்பொக்கணை நாகதம்பிரான் விளக்கு வைக்கும் நிகழ்வு
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 3ஆம் திருவிழா(04.04.2025)
- தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்
- யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்