கொரோனா பெருந்தொற்று முடிவு காலத்துக்கு வருகிறது என்று சுவிட்சர்லாந்து அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அலைன் பெர்செட் கூறியதாவது:-
“ஒரு பெருந்தொற்றில் இருந்து அதன் முடிவு கட்டத்துக்கு செல்வதில் நாம் தீர்க்கமானதாக இருக்கக்கூடிய ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். மக்களிடம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகி இருக்கிறது.
ஒமைக்ரான் வைரஸ் இந்த கொரோனா தொற்று நோயின் முடிவின் தொடக்கமாக இருக்கலாம். ஒமைக்ரான் வைரஸ் மிகவும் வேகமாக பரவக்கூடியது ஆனால் குறைவான ஆபத்துக்கொண்டது.
இருப்பினும் அந்த வைரஸ் எங்களது தடுப்பை உடைப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. அது எச்சரிக்கையாக மாறுவதற்கான பகுதியையும் கொண்டிருக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
மேலும் சுவிட்சர்லாந்து அரசு கொரோனா தனிமைப்படுத்தும் காலத்தை 10 நாளில் இருந்து 5 நாட்களாக குறைக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.