• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கிய சிலர்!

Feb. 16, 2024

அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையினுள் உட்புகுந்த இனம் தெரியாத சிலர் பாதுகாப்பு உத்தியோகரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலைக்கு இன்று மாலை மது போதையில் வந்த சிலர் கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைப் தலையில் பலமாக தாக்கினர்.பாதுகாப்பு உத்தியோகத்தரின் அலுவலக ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனை தடுக்க வந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் கடுமையாக மிரட்டிச் சென்றுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிசாருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு, பொலிசார் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் செய்திகளை தெரிந்துகொள்ள சிறுப்பிட்டி இணையம்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed