இந்தியாவில் காஷ்மீரில் இரண்டு பகுதிகளில் லேசான நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் கார்கில் மற்றும் மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதேபோல், மேகாலயாவின் கிழக்கு காரோ மலை பகுதியிலும் 3.5 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வுகளினால் இதுவரை எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.