• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் சிகையலங்காரத்தால் பறிபோன மாணவன் உயிர்

Jan. 30, 2024

யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் தலைமுடி வெட்டும் விவகாரத்தில் குடும்பத்தினர் கண்டித்ததால் 14 வயதான சிறுவன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னாலை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தினேஷ் ஆதவன் என்ற 14 வயது சிறுவனே உயிரிழந்தார்.

கடந்த 24ஆம் திகதி பிற்பகல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (29) உயிரிழந்தார். 

சிறுவன் சிகையலங்கார நிலையம் சென்று தனக்கு பிடித்த மாதிரி சிகையலங்காரம் செய்து வந்ததாகவும், அவரது சிகையலங்காரம் பாடசாலை மாணவர்களுக்கு உகந்ததல்ல என கண்டித்த தந்தை, மீண்டும் அழைத்து சென்று, மாணவர்களுக்கு உரிய முறையில் சிகையலங்காரம் செய்வித்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் விரக்தியடைந்த சிறுவன் தவறான முடிவெடுத்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்ற நிலையில் மாணவன் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed