• So.. Apr. 6th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அதிகாலையில் ஏற்பட்ட பாரிய விபத்து ! 17 பேர் படுகாயம் ;

Nov. 8, 2023

மாபலகமவில் இருந்து மத்துகம ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை கலசேன பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த விபத்து காரணமாக களுத்துறை மத்துகம வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed