யாழில் முட்டை ஏற்றி வந்த வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், நெல்லியடி குஞ்சர் கடையடி சந்தியில் நேற்று (20) பிற்பகல் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ் விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த அவ் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் விபத்து தொடர்பில் நெல்லியடி போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.