• Mi. Dez 18th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

காணாமல்போன 3 இளைஞர்களில் இருவரின் சடலங்கள் மீட்பு

Jul 24, 2023

நீர்கொழும்பு கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ள நிலையில் இருவரின் சடலங்கள் இன்று (24) காலை மீட்கப்பட்டுள்ளன.

டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான வடிவேல் அரவிந்த்தகுமார் என்பவருடைய சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில் சம்பவம் இடம்பெற்ற ஏத்துக்கால கடற்பகுதிக்கு சிறிது தூரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

கொஸ்லாந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 21வயதான சத்தியமூர்த்தி சிறிவிந் என்பவருடைய சடலம் இன்று முற்பகல் 9. 40 அளவில் ஏத்துக்கால கடற்பகுதியில் இருந்து மீட்கப்பட்டது.

சுன்னாகம் பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதான ஜெயதீஸ்வரன் ஜெயலக்ஷ்மன் என்பவருடைய சடலத்தை தேடும் பணி தொடர்கின்றது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிற்சாலைகளில் பணிபுரியும் குறித்த இளைஞர்கள் தமது நண்பர்களுடன் நேற்று(23)  நீர்கொழும்பு பிரவ்ன்ஸ் பீச் ஹோட்டல் அமைந்துள்ள கடற்பகுதியில் குளிக்கச் சென்றபோதே இவ்வாறு காணாமல்போய் உயிரிழந்துள்ளனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed