• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 18 பேர் பலி!

Jul 16, 2023

இந்திய மாநிலம் பீகாரில் ஒரே நாளில் 18 பேர் மின்னல் தாக்கி பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அங்கு பல மாவட்டங்களில் மின்னல் தாக்கியுள்ளது. இதில் மொத்தம் 18 பேர் ஒரே நாளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹ்தாஸ் மாவட்டத்தில் 5 பேரும், அர்வாலில் 4 பேர், சரணில் 3 பேரும், அவுரங்காபாத் மற்றும் சாம்பாரன் ஆகிய மாவட்டங்களில் 4 பேரும், வைஷாலி, பங்கா மாவட்டங்களில் இருவரும் உயிரிழந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது.

மின்னல் தாக்குதலால் ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அத்துடன் பேரிடர் மேலாண்மை அமைப்பு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறிப்பாக கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் விளைநிலங்களுக்கு செல்வதையோ, மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் இருப்பதை மழை பெய்யும்போது தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல் நகர்புறவாசிகள் மழைபெய்யும்போது சன்னல்களில் இருந்து விலகி நிற்க வேண்டும் எனவும், குளிர்சாதன பெட்டிகள், AC ஆகியவற்றை தொட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed