• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கொளுத்தும் வெயில் ! சுருண்டு விழும் மக்கள் ; விடுக்கப்பட்ட சுகாதார எச்சரிக்கைகள்

Jul 15, 2023

தெற்கு ஐரோப்பாவில் கொளுத்தும் வெயில் காரணமாக முதியோர்களுக்கு சுகாதார எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது.

கடுமையான வெயில் காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. கிரேக்கம் மற்றும் இத்தாலியில் சுற்றுலாப் பயணிகள் சுருண்டு விழுந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மிலன் அருகாமையில், வெளிப்புற ஊழியர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சனிக்கிழமை ஏதென்ஸில் வெப்பநிலை 42C ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை செவில்லாவில் 41C எனறும் செவ்வாய்க்கிழமை ரோமில் 40C என பதிவாக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்து வெப்பமான காற்று ஐரோப்பாவில் நுழைந்துள்ளதாகவே வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2050 வாக்கில், ஐரோப்பிய மக்கள்தொகையில் பாதி பேர் கோடையில் அதிக அல்லது மிக அதிக வெப்ப அழுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றே எச்சரிக்கின்றனர்.

தொழில் புரட்சிக்குப் பின்னர் இந்த பூமி 1.2C அளவுக்கு வெப்பமடைந்துள்ளது என்றே கூறுகின்றனர். ஐரோப்பாவில், வெப்பநிலை கிட்டத்தட்ட இரண்டு மடங்கு வேகமாக உயர்ந்துள்ளது.

மேலும், ஐரோப்பா கண்டம் முழுவதும், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் வெப்பநிலை தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே, திங்களன்று வெளியிடப்பட்ட ஆய்வில், கடந்த ஆண்டு மட்டும் ஐரோப்பாவில் கோடை வெப்பத்தால் 61,000 க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற தெற்கு ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பெண்களும் முதியவர்களும் அதிக விகிதத்தில் இறந்தனர் என்றே கூறப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed