• Do.. Apr. 17th, 2025 10:15:30 AM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம்!

Juli 13, 2023

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் ஒன்றை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காலி – அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13) காலை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி.லசந்த என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (12) 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன குறித்த இளைஞர், இன்று காலை 6 மணியளவில் வீட்டுக்கு 200 மீற்றர் தொலைவில் வெற்றுக்காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துளள்னர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed