• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின்சாரம் தாக்கி வயோதிபத் தம்பதியர் பரிதாப மரணம் !

Jul 7, 2023

கொழும்பு – கொலன்னாவையில் மின்சாரம் தாக்கிக் கணவனும் மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் கொழும்பு – கொலன்னாவையில் நேற்றிரவு (06.07.2023) இடம்பெற்றுள்ளது.

வீட்டின் படுக்கை அறையில் பழுதடைந்த மின்விசிறியைத் திருத்தும் போதே இருவரும் மின்சாரம் தாக்கிச் உயிரிழந்துள்ளனர்.

71, 68 வயதுடைய வயோதிபத் தம்பதியினரே இதன்போது உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வீட்டுப் பணிப்பெண் தகவல் தெரிவித்ததையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.

வீட்டுப் பணிப்பெண்ணிடம் வாக்குமூலத்தைப் பெற்ற பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed