நாட்டில் இன்று முதல் கிரெடிட் கார்ட்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் நாணயக் கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, வட்டி விகிதங்களைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கையின் பல வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ளன.
கிரெடிட் கார்ட்களுக்கான 36 சதவீத வட்டி விகிதம் அடுத்த மாதம் முதல் 34 சதவீதமாக குறைக்கப்படும் என வங்கிகள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த வாரம், நாட்டில் கடன் அட்டைகளின் பாவனை தொடர்பான தரவுகளை மத்திய வங்கி வெளியிட்டது.
அதன்படி, ஏப்ரல் மாதத்தில் நாட்டில் செயற்பாட்டில் உள்ள கிரெடிட் கார்ட்களின் எண்ணிக்கை 1,929,984 ஆக இருந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் மொத்தம் 1,952,991 கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் இருந்தன.அதன்படி, நாட்டில் செயல்பாட்டில் உள்ள கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை சில மாதங்களில் 23,000க்கும் மேல் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.