• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

மின் கட்டணம் குறித்து வெளியான செய்தி!

Juni 26, 2023

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மின்கட்டண திருத்தப் பட்டியல் இலங்கை மின்சார சபையினால் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் வழங்கப்பட்டது.

ஏற்கனவே ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.

எனினும் இம்முறை 3 சதவீதம் மட்டுமே மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், அதுவும் 0-90 அலகுகள் வரையில் மின்சார பாவணையாளர்களுக்கு மட்டுமே மின்கட்டணம் குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed