நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் புதிய வழிகாட்டல் கோவையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலை வளாகங்களில் டெங்கு நுளம்பு பரவாது தடுப்பதே இதன் அடிப்படை நோக்கம் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயாளர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கான சிகிச்சை வழங்குதல், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களின் குருதி மாதிரிகளை பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கலாக புதிய வழிகாட்டல் கோவை வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.