• Di.. Apr. 22nd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது தாக்குதல்

Juni 20, 2023

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தச் சம்பவம் 10.30 மணியளவில் (ஜூன் 19) மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு நபர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனத் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் தாக்குதல் நடத்தப்பட்ட வீட்டில் இருவர் மருத்துவர் என்று குறிப்பிட்ட பொலிஸார், காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வருவதாகவும் கூறினர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed