கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து யாழ். இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி வெளிநாடு சென்ற நபர் ஒருவரை கட்டுநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
டோக்கியோ ஊடாக கனடா செல்லவிருந்த போதே இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபருக்கு போலி வீசா வழங்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.