• Sa. Dez 21st, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

கிளிநொச்சியில் மாட்டுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

Mai 9, 2023

பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் புளியம்பொக்கணை பகுதியில் மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் 18 வயதுடைய இளைஞனும் இரண்டு மாடுகளும் உயிரிழந்துள்ளன.

கண்டாவளை பகுதியில் இருந்து புளியம்பொக்கணை பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் பயணித்த இளைஞன் வீதியில் நின்ற மாடுகளுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளான்.

குறித்த விபத்தில் இளைஞனின் மோட்டார் சைக்கிளுடன் மோதுண்ட மாடுகளில் இரு மாடுகளும் உயிரிழந்துள்ளன. அத்துடன் இளைஞனுடன் பயணித்த மற்றுமொரு இளைஞன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed