இன்று சித்ரா பௌர்ணமியில் சந்திர கிரகணமும் ஒன்றாக நடக்கும் நிலையில் கோவிலுக்கு செல்லலாமா என்பது குறித்து பார்ப்போம்.
சித்திரை திருவிழாவுடன் கூடிய சித்ரா பௌர்ணமி நாள் நன்னாளாக இருப்பதால் பலரும் இந்நாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இன்று சித்ரா பௌர்ணமி அனைத்து கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புத்த பூர்ணிமா, சித்ரா பௌர்ணமி சேர்ந்த இந்த நன்னாளில் சந்திர கிரகணமும் வருகிறது.
வழக்கமாக தமிழ் ஆண்டுகளில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் ஏற்படும். ஆனால் இந்த சோபகிருது ஆண்டில் 3 சந்திர, சூரிய கிரகணங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
இன்று நிகழவிருக்கும் சந்திர கிரகணம் இந்திய நேரத்தில் இரவு 8.45க்கு தொடங்கி 10.50க்கு முழுமையடைந்து நள்ளிரவு 1 மணியளவில் நிறைவடையும் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சந்திர கிரகணம் இந்தியாவில் தென்படாவிட்டால் கிரகண தோஷம் செய்ய தேவையிருக்காது.இந்த கிரகணம் இந்தியாவில் தென்படும் என்பதால் சந்திர கிரகணத்தில் கோவில் நடைகள் மூடப்படும். கிரகண சமயம் கோவிலுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. கிரகண தோஷம் உள்ளவர்கள் மற்றும் விருச்சிகம், ரிஷப ராசிக்காரர்கள் தானங்கள் செய்வதும், தர்ப்பணங்கள் செய்வதும் நல்லது.