• Do. Dez 5th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் உயிரிழந்த பெண்ணையும் விட்டு வைக்காத கொள்ளையர்கள்!

Mai 1, 2023

யாழ் போதனா வைத்தியசாலையி உயிரிழந்த வயோதிப தாயின் சுமார் 08 இலட்சம் பெறுமதியான தங்கம் திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

யாழ்ப்பாணம் பலாலி வீதியில் நேற்று குடிபோதையில் இளைஞன் ஒருவன் ஓட்டிச் சென்ற கார் மூதாட்டி மீது மோதியுள்ளது.

பொலிஸார் சந்தேகம்
யாழ்ப்பாணம் பலாலி வீதியிலுள்ள ஆலயமொன்றுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த உமாதேவி கனகநாயகம் (வயது 73) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed