• So.. Apr. 6th, 2025 2:33:13 PM

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

தென் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு ! 10 பேர் உயிரிழப்பு ;

Mai 1, 2023

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் அமைந்துள்ள ஈக்குவாடோரின்  குவாயாகில் நகரில் ஆயுதம் தாங்கிய கும்பல் பொது மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஐந்து வயது சிறுமி உள்பட மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஈக்வடோரில்,  போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது.  அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இதனால் தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அந்நாடு அனுமதி அளித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed